பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

தேசியக் கல்வி, மனுஷ்ய ஜாதியின் விடுதலை, இவ்விரண்டு பெருங் காரியங்களைத் தொடங்குவதற்கும் இப்போது காலம் மிகவும் பொருத்தமாக வாய்த்திருது கிறது.

இவற்றுள் மனுஷ்யஜாதியின் விடுதலை நிறைவேற வேண்டுமாயின், அதற்கு பாரத தேசத்தில் விடுதலை இன்றி யமையாத மூலாதாரமாகும்.

இங்ஙனம் பாரத தேசம் விடுதலை பெறவேண்டுமாயின் அதற்கு தேசீயக் கல்வியே ஆதாரம்.

‘அ............ன்’

மேலே காட்டிய குறியின் பொருள் யாது?

தமிழ் நாட்டில் தேசீயக் கல்வி நடைபெற வேண்டு மாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா வ்யவஹாரங்களும் தமிழ் பாஷையில் நடத்த வேண்டும் என்பது பொருள்.

ஆரம்ப விளம்பரம் தமிழில் ப்ரசுரம் செய்ய வேண்டும் பாடசாலைகள் ஸ்தாபிக்கப் பட்டால், அங்கு நூல்க ளெல்லாம் தமிழ் மொழி வாயிலாகக் கற்பிக்கப் படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும்; “ஸ்லேட்,” “பென்ஸில்” என்று சொல்லக்கூடாது.

40. ஆசார திருத்த மஹாசபை

(குறிப்பு : இந்த மஹாசபை 1920ஆம் ஆண்டு ஜூன் 22-இல் தொடங்குகிறது. எனவே, இக் கட்டுரை அகற்குச் சில நாள் முன்பு எழுதப் பட்டிருக்க வேண்டும். அக்காலத்தில் புதுவையை