பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. தேசீயக் கல்வி

(குறிப்பு : இக்கட்டுரை ஐந்து பகுதிகளாக 1920 மே மாதம் 13, 18, 20, 21, 28 என்ற தேதி களில், சுதேசமித்திரனில் வெளியாகியுள்ளது. இவற்றைத் தொகுத்து ஒரே கட்டுரையாக சமூகம் என்ற பகுதியில் பாரதி பிரசுராலயத் தார் வெளியிட்டுள்ளார்கள். ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்தையும், வேறு சில பகுதிகளையும் இக் கட்டுரையின் இரண்டாம் பாகமாகவும் தந்துள்ளார்கள். இதில் ஒரு சிலவற்றைப் பொருந்தாத முறையிலும் பதிப்பித்துள்ளனர். ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அப்படியே இங்கு சேர்த்துள்ளேன்.

ஆனால், சுதேசமித்திரனில் வெளியானதை விட, இதில் சற்று விரிவாகவே இருக்கிறது.

தேசீயக்கல்வி (2) என்ற பகுதியும் புதிதாகச் சேர்ந்துள்ளது. என்ன காரணம் பற்றி இதைச் சேர்த்தார்கள் என்பதை அறிய வழியில்லை.

பாரதியார் புதுச்சேரியை விட்டு மீண்டும் அன்றைய தமிழகத்திற்கு வந்துவிட்டார். ஆனல் 1920ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில்தான் மித்திரனில் இரண்டாம் முறையாகச் சேர்ந்தார் என்று ஊஹிக்க முடிகிறது. தேதி திட்டமாகத் தெரியவில்லை.

தேசீயக்கல்வி என்ற கட்டுரையோ மே மாதத்தில் வெளியாகியுள்ளது. அது சமயம் பாரதியார் கடயத்திலிருந்துகொண்டு பலவித