பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

தன்னை மறந்து, வித்தையின் இன்பத்திலே தன் புத்தி வதையும் செலுத்தி ஆடும் தாசி நன்றாக ஆடுவாள்.

அழகில்லையோ? வகுப்பு சரியாயிருக்கிறதோ லயோ? நெற்றிப் பொட்டு நேரே விழுந்திருக்கிறதோ னவோ? பாதி ஆட்டத்தில் முன்னெருமுறை வயிற்று வந்ததுபோல் வந்துவிடுமோ என்னவோ?’ என்று தன் நிம் குழம்பிப் போயிருந்தால் ஆட்டம் நேரே வராது.

தன்னை மறந்து சகல உலகினையும் மன்னி நிதங்காக்கு மகாசக்தி-அன்னை அவளே துணையென் றமைவெய்தி நெஞ்சம் துவளா திருத்தல் சுகம்.

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை-தஞ்சமென வையமெலாங் காக்கு மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு.

வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம் செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமெனும் சொல்லால் அழியும் துயர்.

எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாம் விண்ணிற் சுடர்கின்ற மீனையெலாம்-பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நூருண்டு பக்தியுடன் வாழும் படிக்கு.