பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

நோயிலே செத்தவன் போக, அதிலிருந்து நன்றாகத் தேறியெழுந்தவன் அறிவிருந்தால் முன்னைக்காட்டிலும் தான் அதிக சுகநிலையில் இருப்பதை உணர்ந்துகொள்வான். வெளிப்படையாகத் தோன்றும் நோய்க்குறிகள் எல்லாம் உடலுக்குள் இருக்கும் விஷத்தை வெளியேற்றிச் சுகந்தரும் பொருட்டாக இயற்கையால் செய்யப்படும் உபாயங்களே பாகுமென்று சிறந்த வைத்தியர்கள் சொல்லியிருக் கிறார்கள்.

ஸஅrம ஞானத்திலே நாட்டமில்லாத ஐரோப்பிய ஸயன்ஸ்'காரர்கூட, அடியிலே பூச்சி நிலையிலிருந்து உயிர் மேன்மேலும் படிப்படியாக ஏறி மனிதநிலை பெற்றிருப்பதை நோக்கும்போது உயிர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதே இயற்கையின் உட்கருத்தென்பது தெளிவாகிற தென்று சொல்லுகிறார்கள். ஜந்துக்கள் செய்யும் போராட் டங்களும், அவைபடும் துன்பங்களும் அவற்றின் உயர்வுக் காகவே ஏற்படுத்தப் படுகின்றன என்பதையும்.அங்கீகாரம் செய்து கொள்கிறார்கள். இங்ஙனம் நம்மை உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய இயற்கைக்கு நாமும் அறிவுத் துணிவினலே உதவி புரிவோமானல், அவ்வுயர்வு விரைவிலே கைகூடும்.

வீணுக அஞ்சுவதிலே பயனில்லை. இவ்வுலகம் நம்மிடம் இணையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு நல்லது.

தெய்வ பக்தியுடையோர்

இனி, தெய்வ பக்தி யிருப்பதாக வாயினலே சொல்லிக் கொண்டு, வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு கபிஷேகம் பண்ணி வைப்பவர்களிலேயும், பெரும்பான்மை ாேர் உண்மையான பக்தி கொண்டவரில்லை. தெய்வபக்தி