பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

ததுவிடலாம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை என்று துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டி து. எப்படியேனும், தேகத்தை உறுதிசெய்து கொள்ள ண்டும். நமது காரியம் முடிந்தபிறகுதான் சாவோம். அவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நம் கூடிய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.

26. மனிதன் வேலை செய்யப் பிறந்தான்

5, ஜனவரி 1907.

(குறிப்பு : “சோம்பல் மிகக் கெடுதி பாப்பா’ என்று குழந்தைக்கே உபதேசம் செய்கிறார் பாரதி யார். சோம்பலைப் பல இடங்களில் அவர் கண்டித்து எழுதியுள்ளார். ஏதாவது பயனுள்ள செயல் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் மதம். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-iணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்’ என்பது அவர் வாக்கு.

“எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத் துக்கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்களெல் லாம் உழைப்பைக் கண்டவுடன் ஒடிப் போய் விடும். இவ்வாறு சித்தக் கடல் என்று பாரதி யார் குறித்து வைத்துள்ள நாட்குறிப்புப் போன்ற பகுதியிலே தமக்குத்தாமே சொல்லிக் கொள் கிறார், ---