பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள சுலபமான வழியிருக்கிறது. தீராத தைரியம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். எதற்கும் அஞ்சாத தைரியமே உண்மையான தெய்வ பக்திக்கு லக்ஷணம். அஃதில்லா த பக்தி தேங்காய்க்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும் வீண் செலவு.

தெய்வம் உண்டா?

தெய்வம் உண்டென்று நீ நம்புகிருயா? உண்டாளுக் அது சர்வ சக்தியுடையது. அது என்னைப் படைத்தது, நாளுக என்னை உண்டாக்கிக் கொள்ளவில்லை அது என்னை: காக்கின்றது. எனது செய்கையாலே நான் உயிர் பிறக்க வில்லை. அதையே சரணடைவேன். இனி எதற்கும் பய மில்லை. அதை நான் பரிபூர்ணமாகச் சரணடைந்தால் அதன் சக்திகளெல்லாம் என்னிடத்திலே தோன்றும் மேருவைச் சார்ந்த காக்கையும் பொன்னிறமடையும். அதனல் அமரத்தன்மை பெறுவேன். இவ்விதமாக ஒருவன் மனத்தை உறுதி செய்துகொண்ட பிறகு, அவ்வுறுதிக்கு இணங்கும்படி தன் செய்கைகளை யெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடிப்படை

முதலாவது, நோய் தீர்த்துக்கொள்ள வேண்டும். நோயுள்ள உடம்பு பயனில்லை. நோயை ஒருவன் தனது மனே பலத்தாலே நீக்கிவிடலாம். நல்ல காற்று, நல்ல நீர் ஒளி, வெயில், இவற்றிலே உடம்பு பழகவேண்டும். நாள் தோறும் ஏதேனும் ஒர் காரியத்திலே உடல் வெயர்க்கும்படி உழைக்க வேண்டும். இது புதிய உயிர் கட்டுவதற்கு அடிய 6-