பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

தெளிந்தும் கலங்குவார். இவர்கள் ம ன ஞ் சோர வேண்டாம். சிலர் அப்யாஸம் செய்வதில்லை. சிலர் செய் தாலும் உறுதி யடைவதில்லை. இவர்கள் மனஞ் சோர வேண்டாம். விடாமுயற்சி ஒன்றிருந்தாற் போதும்; பிறன் ஒரடியிற் செய்வதை இவர்கள் நூறடியிற் செய்வார்கள். பிறன் பத்தடியிற் செய்வதை இவர்கள் ஆயிரம் அடியிற் செய்துவிடுவார்கள். இந்த விடாமுயற்சி விதிப்படி, நடப்பவன் எத்தனை மூடனயினும் மேதாவியாய் விடுவான்; எத்தனை பலஹlனனயினும் வலிமை பெற்று விடுவான். (கன்யூஷியஸ்.)

காலத்தாலும் பொறுமையாலும் முசுக்கட்டை இலை பட்டாய் விடுகிறது. (பாரசீகப் பழமொழி.)

உடம்பைப் போல உணர்வும் தான் ஏற்படுத்திக் கொள்ள விரும்பும் வழக்கத்தைப் பழக்கத்தினல் அடை கிறது. (ஸொக்ராதெஸ்.)

ஆத்ம சுத்தியாகத் தொழிலைச் செய்யுங்கள். அதில் விழிப் போடிருங்கள். விடாமுயற்சி செய்யுங்கள். சிந்தனையோடிருங்கள். உங்கள் விடுதலையிலே கருத்தைச் செலுத்துங்கள். (மஹா பரி நிர்வாண ஸகுக்தம்.)

கடைசிவரை எவன் பொறுத்திருப்பானே அவன் காக்கப்படுவான். (பைபில் : மத்தேயு.)

விடாமுயற்சியாலே ஆத்ம வுடைமை பெறுவீர். (பையில் : லூக்.)

சிறுக விதைத்தவன் சிறுக அறுப்பான். பெருக விதைத்தவன் பெருக அறுப்பான். (பைபில் : கொரிந்தி பார்)