பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

முக்கியமான குறிப்பு:-ஹிந்துக்களல்லாத பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால் அவரவர் மதக்கொள்கை களை அன்னியமத துரஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக்கொடுப்பதற்குரிய வழிகள் செய்யவேண்டும்.

முடிவுரை

தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசீயக் கல்வி இன்றியமையாதது. தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம். இந்த விஷயத்தை ரவீந்தரநாத் தாகூர், ஆனி பெஸண்ட், நீதிபதி மணி அய்யர் முதலிய ஞானிகள் அங்கீகரித்தும், நம் நாட்டில் தேசீயக்கல்வியைப் பரப்புதற்குரிய தீவிரமான முயற்சிகள் செய்கின்றனர். ஆதலால், இதில் சிறிதேனும் அசிரத்தை பாராட்டாமல், நமது தேச முழுதும், ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள்

வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற் கடமை யாம்.

தேசீயக் கல்வி (2)

யூரீமான் ஜினராஜ தாஸரின் கருத்து

“கல்வியைப் பற்றிய மூலக்கொள்கைகள் எல்லா நாடு களுக்கும் பொது. ஆனால், அந்தக் கொள்கைகளை வெவ்வேறு தேசங்களில் பிரயோகப் படுத்தும் போது இடத்தின் குணங்களுக்கும் ஜனங்களின் குணங்களுக்கும் தக்கபடி கல்வி வழியும் வெவ்வேழுய்ப் பிரிந்து தேசியமாகி விடுகிறது. இங்கிலாந்தின் கல்வி முறையில் பலவகை விளையாட்டுகளும் சரீரப்பயிற்சி முறைகளும் கட்டாயமாக 2ற்பட்டிருக்கின்றன. இத்தாலியில் அவை புறக்கணிக்கப்