பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4]

பேசுவதும் உழைப்பாகாது. தனக்கும், தன் குடும்பத்திற்கும் தான் பிறந்த தேசத்திற்கும், மற்றவர்களுக்கும் உபயோக மான தொழிலைச் செய்வதே உழைப்பாகும். வேலை செய்யாமல் ஒருவனிடம் பண்ம் பெறுவது பிச்சையே யாகும். ஏற்பது இகழ்ச்சி என்று ஒளைவை கூறியிருக்கிருள். பிச்சை எடுப்பவன் தனது மான அபிமானத்தை விட்டு விடுகிருன். புத்திசாலியோ யாசகம் செய்ய இசையான். கண், கால், கை முதலிய அவயவங்கள் ஹீனமானல் பிச்சையெடுப்பது நியாயமாகும். அவயவங்கள் நல்ல ஸ்திதியில் இருக்கும்போது அசந்தவன் போல் வேஷம் போட்டுக்கொண்டு இரந்துண்பது மானக்கேடு. சென்னை திருச்சி போன்ற சிலவிடங்களில் சோம்பேறிகளென்று ஒருவகைப் பிச்சைக்காரர்கள் உண்டு. இவர்கள் எந்த வீட்டில் கல்யாணமானலும் எச்சிலிலைக்குத் தயாராய்க் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்த சோம்பேறிகள் கூட, திருவிழாக்களில் தீவட்டி பிடித்துச் சம்பாதிக்கின்றனர். இந்தச் சோம்பேறிகளைவிட கேடுகெட்ட சோம்பேறி களாய் நமது தேசத்தில் எத்தனையோ பணக்காரர்களும் மிராசுதார் ஜமீன்தார்களும் இருப்பதைப் பலவிடத்தும் காணலாம். வெளிநாடுகளில் சோம்பேறிகள் என்று பெயர் வைத்துக்கொள்ளாமலே காரியம் செய்யாமல் காலம் கழிக்கும் முதல்தர சோம்பேறிகள் வெகு பேர் இருக்கின்றனர். இவர்களால் அநேக குடும்பங்கள் அழிந்து போகின்றன. தகப்பன் பாட்டன் சிரமப்பட்டுத் தேடிய பணத்தைத் தாராளமாய் செலவுசெய்யும் மனிதனுக்குப் பெருமையில்லை. தானே தேடி, தானே செலவழிப்பவனே *த்தமன். எதேஷ்டமாக திரவியமிருப்பதால் வேலை ‘துக்குச் செய்ய வேண்டுமென்று சிலர் கூறுவர். வேலை செய்வதாவது கேவலம், ஸம்பாத்தியத்தை உத்தேசித்து விட்டுமல்ல. பல ஜனங்களுக்கு உபயோகமான ஒர்