பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 I

வசதிகள் இல்லை. கலப்படமற்ற உணவுப் பொருள் கிடைக்காது. குடிநீர்கூட இந்த நாட்டில் நல்ல வகையில் கிடைப்பது அருமை. மெய்தான்.

இவற்றையெல்லாம் போக்குவதற்காகத் தானே முதலில் எண்ணி வெளிநாடு சென்றீர்கள்? தாய்நாட்டின்மீது அத்தனை பக்தியில்லையா? உங்கள் சுகம், உங்கள் இன்பம்-இவைதான் பெரிதாக உள்ளனவா?

இப்படிக் கேட்கும் நிலையில் நாம் இருக் கிருேம். இந்த அவல நிலையை மாற்ற வழி யில்லையா? இதற்கொரு மருந்தில்லையா? நாட்டுத் தலைவர்கள் பார்த்துக்கொண்டு வாளா இருக்கிறார் கள். இன்று பாரதியார் உயிரோடிருந்தால் அவர் நெஞ்சம் என்ன பாடுபடுமோ!)

உலகம் எவ்வாறு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிற தென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல், அற்ப விருப்பங்களிலும், அற்பச் செய்கை களிலும் நாளை யெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளை களைப்போல் வாழ்வதிலே பயனில்லை.

வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப் பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேடவேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு, மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய