பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

‘சுதேசியம், ஜாதிஸ்மத்வம், தேசபாஷைப் பயிற் தெய்வ பக்தி இந்த நான்கையும் இன்றைக்கே பழ: சாதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம தேசம் அழிந்துபோய் விடும்.

“நாக்கைக் கட்டுதல், பிரமசரியம் இவையிரண்டை செல்வர்கள் இடையிடையே அனுஷ்டித்தால் அவர்களுக் நன்மையுண்டாகும். ஏழைகளுக்கு இந்த உபதேசம் அவ8 மில்லை. அவர்களுக்கு நாக்கை ஏற்கெனவே கட்டித்தா வைத்திருக்கிறது. பிரமசரியத்தை ஜாதி முழுமைக்கு ஸ்ரீகாந்தி தர்மமென்று உபதேசம் செய்யவில்லை. அ வேலை செய்தால் தேசத்தில் சீக்கிரம் மனிதரில்லா போய்விடும்.

‘'காந்தி பதினெரு விரதம் சொன்னர். நா பன்னிரண்டாவது விரதமொன்று சொல்லுகிகிறேன். அ யாதெனில் :-எப்பாடு பட்டும் பொருள் தேடு; இவ்வுல: திலே உயர்ந்த நிலை பெறு; இப்பன்னிரண்டாவு விரதத்தை தேச முழுதும் அனுஷ்டிக்க வேண்டும்.’

22. தராசு சொல்லும் அரிய உண்மை

(குறிப்பு : பாரமார்த்திகம் வேறு:லெளகிகம் வேறு: ஆன்மீகத்திற்குப் பெரியோர் சொன்ன உண்மைகள் இல்லற வாழ்க்கைக்குப் பொருந்தா. எல்லாம் மாயை, எல்லாம் பொய் என்பதை இல்லறத்தான் கூறக்கூடாது. தங்க விக்ரஹம் போலே பெண்டாட்டி எதிரிலே நிற்கிருள். அவள் பொய்யா? நடு வீட்டில் இதை உச்சரிக்கலாமா? என்று பாரதியார் கேட்கிறர். நிற்பதுவே,