பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

யாகவே சைன்யம் வகுத்து விளையாடிப் பழகுகிறது. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் பிறவி ஒருவனுடைய குணத்தையும் தொழிலையும் நிர்ணயிக்கத் தான் செய்கிறது. ஆதலால் இப்போதுள்ள ஜாதிப் பிரிவை அதிகமாக மாற்றக்கூட வேண்டியதில்லை. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றாேரே மேல் வருக என்று சொல்லி பிராமணப் பதவியிலே சேர்க்க வேண்டும் இதற்கிடையே திருஷ்டி தோஷம் புத்திசாலித் தனமில்லை. அதை உடனே நிறுத்திப் போடவேண்டும். “தீண்டாத ஜாதி என்கிற பேச்சே கூடாது. அது வெறும் பயித்தியம். நந்தன் சிலையை அறுபத்து மூன்று நாயன் மாருக்கு நடுவிலே வைத்து குருக்கள் மணியடித்துக் கும்பிடவில்லையா? ஜாதியாவது குலமாவது! இவை யெல்லாம் லெளகிகம். இதனுலே மனுஷ்ய ஸ்மத்வத்துக்குக் குறைவு நேரிடக்கூடாது. ராம்தாஸ், கபீர்தாஸ், அவர்கள் சொன்னதெல்லாம் பொய்யா?”

இவ்வாறு சேஷய்யங்கார் நெடுந்துாரம் சொன்னர். போகப் போக அவருடைய பிரசங்கத்தில் நான் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கும்படி நேரிட்டது. ஏனென்றால் இவர் பேசிக்கொண்டிருக்கும் போதே எங்கள் பக்கத்தில் ஒரு கிழவன் வந்து நின்றான். அவனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும் போலே தோன்றிற்று. ஆனல் திடகாத்திர முடையவன். அவன் சேஷய்யங்காருடைய பிரசங்கத்தை மிகவும் ஜாக்கிரதையாகக் கேட்டுக்கொண்டு வந்தான். சேஷய்யங்கார் சொல்லும் வார்த்தைகளிலே ஒன்றிரண்டை கேட்டுப் புன்சிரிப்புச் சிரித்தான். ஒரிரண்டு வார்த்தைகள் அவன் முகத்திலே கோபக் குறி விளைவித்தன. நான் அவனைக் கையில்ை சமிக்கை காட்டி என்னருகே வரும்படி சொன்னேன். ஸ்மீபத்தில் வந்தான். நீ என்ன ஜாதி”