பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

குழந்தைகளும் சேர்ந்து படிக்கும் விஷயத்தில் ஆக்ஷேபம் சொல்லக்கூடிய கிராமங்களில், இதை வற்புறுத்தாமல், முதலில் ஆண்பிள்ளைகளுக்கு மாத்திரமாவது தேசீயக் கல்வி பயிற்ற ஏற்பாடு செய்யலாம். பெண்குழந்தைகளுக்கு இதே மாதிரியாக உபாத்திச்சிமார் மூலமாகக் கல்வி பயிற்றக்கூடிய இடங்களில் அதனையும் செய்யலாம்.

பாடசாலை வைப்பதற்குத்தக்க இடங்கள் செல்வர் களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இது ஸெளகர்யப்படாத இடங்களில் கோயில்கள், மடங்கள் முதலிய பொது ஸ்தலங்களிலே பாடசாலை நடத்தலாம். அ. தி க ப் பணச்செலவின்றி ஸெளகர்யமும், நல்ல காற்றாேட்டமும் ஒளிப்பெருக்கமுமுடைய கூ ைற க் கட்டிடங்கள் கட்டி அவற்றில் பாடசாலை நடத்தினல் போதும். இடம் பெரியதாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. ஏராளமான பணஞ் செலவுசெய்து கட்டிடங்கள் கட்டவேண்டிய அவசியமுமில்லை. ஸாதாரண லெளகர்யங் கள் பொருந்திய இடங்களில் கல்வி நன்முகக் கற்பித்தால் அதுவே போதும்

இங்ஙனம் ஆரம்பப்பாடசாலைகளில் படித்துத் தேறும் பிள்ளைகள் அந்த அளவிலே ஏதேனும் தொழில் அல்லது வியாபாரத்துறையில் புகுந்து தக்க ஸம்பாத்யம் செய்யத் தகுதியுடையோராய் விடுவார்கள். அங்ஙனமின்றி, நாட்டி லுள்ள பல உயர்தரப் பாடசாலைகளில் அவர்கள் சேர்ந்து மேற்படிப்பு படிக்க விரும்பிலுைம் அதற்கு இப் பள்ளிச் கூடங்கள் தக்க ஸாதனங்களேயாகும். மேலும் அவ்வித மான ஆரம்பப் பாடசாலைகள் நன்கு நடந்து வெற்றி பெற்றுவிடுமாயின், அப்பால் இதே கொள்கைகளே ஆதாரமாகக் கொண்ட மேல்தர தேசியப் பாடசாலைகள் ஏற்படுத்தக் கூடிய இடங்களில் அங்ஙனம் செய்யலாம்.