பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

நாடு முழுதுந் தேடிப்பார்த்தால் ஸ்ரீமதி மங்களாம்பாளைப் போல இன்னும் பத்து ஸ்த்ரீகள் அகப்படமாட்டார்கள் என்று நினைக்க ஹேதுவில்லை. எதற்கும் மேற்படி ஆட்சி மண்டலம் சமைத்து, அதில் பத்துப் பெண்களைக் கூட்டி, நடத்தவேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினால், அதினின்றும் அவர்கள் பயன்படத் தக்க பல உதவி யோசனைகளையும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புது ஞானங்களையும் சமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் ஸ்ந்தேஹமில்லை. முன்பு தமிழ் நாட்டை மங்கம்மா ஆளவில்லையோ? ஒளவையார் உலக முழுவதும் கண்டு வியக்கத்தக்க நீதி நூல்கள் சமைக்க வில்லையோ?

மீர்ஜா ஸ்மி உல்லா பேக்

முன்பு முகம்மதிய ஸர்வ கலா ஸங்கம் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் எழுந்த முயற்சியில் தலைவர்களில் ஒருவராக உழைத்த மீர்ஜா ஸ்மி உல்லா பேக், “ஜாதி மத பேதங்களால் சிதைந்து போயிருப்பதால், பாரத தேசத்தார் மேலே எழமாட்டார்களென்று பிறர் கூறும் அவலச்சொல்லை நீங்கள் கேட்காதிருக்க வேண்டினல் மேலும் ஸ்வராஜ்யத்துக்குத் தகுதியுடையோராக உங்களைச் காட்டிக்கொள்ள விரும்பினல், தேசீயக் கல்விக்குத் துனே செய்யுங்கள். இந்தத் தருணம் தவறினால், இனி.வே. தருணம் இப்படி வாய்க்காது’ என்கிறார். தேசீயக் கல்வி யும் ஸ்வராஜ்ய மும் தம்முள்ளே பிரிவு செய்யத் தகாதன் என்றும், இவ்விரண்டினுள் ஒன்றன் அவசியத்திை அங்கீகாரம் செய்துகொள்ள வேண்டும் என்றும் அரவிந்த கோஷ் சொல்லியதும் மேற்படி ஸ்மி உல்லா சொல்வதும் பொருத்தமாகவே காணப்படுகின்றன. எந்த வினைக்கும் காலம் ஒத்து நின்றாலொழிய அதை நிைறவேற்றுதசி