பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

கெளரவப் படுத்தும்படி அத்தனை மேன்மையான நிலைமை யிலே இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை இதர ஜாதியார் மிகவும் தாழ்ந்த நிலைமையிலே வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குப் போனல் மற்ற ஜாதியார் எங்களே வெளிப்புறத்திலே நிறுத்துகிறார் கள்.நேரே ஸ்வாமி தர்சனம் பண்ண வழியில்லை. எங்களுக்கு ஒரு புகல் சொல்லக்கூடாதா?’ என்று கேட்டார்கள். அப்போது நாராயணஸ்வாமி சொல்கிறார் :

‘கேளிர், ஸ்கோதரர்களே! கோயில் கட்டுவதற்கு நம்பூரிப் பிராம்ணர் தயவு வேண்டியதில்லை. கல்வேலை தெரிந்த கல்தச்சர் நாட்டில் எத்தனையோ பேர் இருக்கிறார் கள். பணம் கொடுத்தால் கோயில் கட்டிக்கொடுப்பார்கள். ஆதலால், நீங்கள் இந்த விஷயத்தில் வருத்தப்பட வேண்டாம். பணம் சேர்த்துக்கொண்டு வாருங்கள். எத்தனை கோயில் வேண்டுமானலும் கட்டலாம். நான் ப்ரதிஷ்டை பண்ணிக் கொடுக்கிறேன்’ என்றார், இதைக் கேட்டவுடனே தியர்கள் தமக்குள்ளிருந்த பணக்காரரிடம் தொகை சேர்க்கத் தொடங்கினர்கள். கால்க்கிரமத்தில் பெரிய தொகை சேர்ந்தது. இப்போது பல இடங்களில் மேற்படி ரீ. நாராயண ஸ்வாமி ஆலய ப்ரதிஷ்டை செய்திருக்கிறார்’ என்று சாஸ்திரி சொன்னர்.

‘இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?” என்று வேதவல்லி யம்மை கேட்டாள்.

“ஆம், அவர்களுக்குக் கோபம்தான். ஒருநாள் இந்த நாராயணஸ்வாமி ரயில் யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து சேர்ந்தார். அந்த நம்பூரி இவரை நோக்கி இடது கைச்