பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

43. ரீமான் ரீநிவாச சாஸ்திரியர்

(குறிப்பு : பாரதியார் உடனே சமூகம் சீர் திருந்த வேண்டும் என்ற பேராவல் கொண் டவர். பரபரப்பு மிகுந்தவர். யாராவது ஒருவர் சமூக சீர்திருத்தமாகத் துணிச்சலோடு ஒரு செய்கை செய்து விட்டால், அவரை மிக மகிழ்ச்சியோடு வரவேற்பார்.

பெண்கள் ருதுவான பிறகே மணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பாரதியார் கொள்கை. எப்பொழுது ஒரு கருத்து நன்மை யாகத் தோன்றுகிறதோ அதைப் பின்பற்றவும் செய்வார். பாவம் திருமதி செல்லம்மா பாரதிக்கு இது பிடிப்பதில்லை. ‘ருதுவான பிறகு மணம் செய்து கொடுப்பதே நல்லது என்ற பாரதியார் தமது மகள் தங்கம்மா பாரதியைப்பற்றி, அவள் ருதுவாகியுள்ளாள் என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார். இது அவர் மனைவி யாருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அப் பொழுது ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்தியார்.அவர்கள் ருதுவான பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறவே, அதனை மகிழ்ச்சியோடு பாரதியார் வரவேற்று ஒரு தனிக் கட்டுரையும் எழுதிவிட்டார். இக்கட்டுரை சுதேச மித்திரனில் 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம்தேதி வெளியாகி உள்ளது.) சுதேச மித்திரன் பத்திராதிபர் அவர்களுக்கு:சென்னைப் பட்டணத்தில் ரீமான் ரீநிவாஸ் சாஸ்திரியார் தமது பெண்ணை ருதுவான பிறகு விவாகம் செய்து கொடுத்த செய்தி எனக்கு சந்தோஷம் தருகிறது.