பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஆர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாலும், அவருக்கு ஒயாழக்கிழமை ரஜா கிடையாதாகையாலும், வெள்ளிக் கிழமையன்று உபாகர்மம் நடத்தினுல்தான் மாப்பிள்ளையும் தானும் சேர்ந்து நடத்தமுடியும் என்பதையும் உத்தேசித்து, இந்த நிலைமையில் முத்துஸாமி அய்யரைக் காட்டிலும், கும்பகோணமே ப்ரமாணம் என்பதாகத் தீர்மானஞ் செய்துவிட்டார். ருஷியாவிலே குழப்பம் எப்படி இருக்கிறது ஸ்வாமி?’ என்று பிரமராயர் முடித்தார். “அது எக்கேடும் கெட்டுப் போகிறது; மேலே உபாகரிம விஷயத்தைச் சொல்லும்’ என்றேன்.

இந்த சமயத்தில் கோயில் தர்மகர்த்தா வீரப்ப முதலி யாரும் அங்கே வந்து சேர்ந்தார். வந்தவர், என்னை நோக்கி இன்று கோவிலில் பிராமண அட்டஹாலம் அதிகமாக நடக்கும். நீங்கள் கோவிலிலே பூணுரல் போட்டுக் கொள்ளு கிறீர்களா; வீட்டிலேதான?” என்று கேட்டார். வீட்டில்’ என்றேன். “கோயிலும் வீடும் ஒன்றுதானே?’ என்று பிரமராயர் ஸஅrமார்த்தமாகக் கேட்டார். “ஆம்” என் றேன். வீரப்ப முதலியார் பேசத் தொடங்கினர்: “பூணுரலை எடுத்துப் போடுங்கள்: இந்தியா முழுவதும் ஒரே ஜாதி, ஒரே உடுப்பு, ஒரே ஆசாரம் என்று செய்து விடவேண்டும்; அதுவரை பிராம்மண சபை, அப்ராம்மண சபை, ரெட்டி சபை, வன்னியர் சபை, முதலியார் சபை-இந்த இழவெல் லாம் தீராது. ஒரே கூட்டம் என்று பேசு. பூணுரலென்ன ணுேரலென்ன. வீண் கதை’ என்றார். பிரம்ராயர் சமா கானப்படுத்தப்போனர். வீரப்பமுதலியார் சொல்லுகிறார்: எல்லாம் தெரியும் தெரியும். யாரோ ஒரு ராஜாவாம்: அவன் பூணுாலே ஒரு தட்டிலும் பொன்னே ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்தானம்; பூனூல் கீழே இழுத்ததாம்; பொன் மேலே போய்விட்டதாம். இதெல் லாம் முட்டை சரி சமானமாக ஐரோப்பியர்களைப் போலே