பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

நியாயத்தால் எதிர்ப்போம்; அதர்மத்தை தர்மத்தால் ஒழிப்போம்” என்று காந்தி சொன்னர். -

சகோதரிகளே, நாம் விடுதலை பெறுவதற்கும் இதுவே உபாயம். நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிருேம். நமக்கு அவர்கள் அண்ணன் தம்பிகளாகவும், மாமன் மைத்துனராகவும், தந்தை பாட்டனராகவும், கணவர் காதலராகவும் வாய்த் திருக்கின்றனர். இவர்களே நமக்குப் பகைவராகவும் மூண்டிருக்கையிலே, இவர்களை எதிர்த்துப் போர் செய்ய வேண்டுமென்பதை நினைக்கும்போது, என்னுடைய மனம், குருக்ஷேத்திரத்தில் போர் தொடங்கியபோது அர்ஜூன. னுடைய மனது திகைத்தது போலே திகைக்கிறது. ஆண் மக்களை நாம் ஆயுதங்களால் எதிர்த்தல் நினைக்கத்தகாத காரியம். அது பற்றியே, சாத்விக எதிர்ப்பில்ை இவர் களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்ய வேண்டுமென்று’ நான் சொல்லுகிறேன்.

“அடிமைப்பட்டு வாழமாட்டோம்; ஸ்மத்வமாக நடத்தினுலன்றி உங்களுடன் சேர்ந்திருக்க விரும் போம் என்று அவர்களிடம் வெளிப்படையாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டு, அதனின்றும் அவர்கள் கோபத்தால் நமக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளையெல் லாம் தெய்வத்தை நம்பிப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுப்பதே உபாயம். இந்த சாத்வீக எதிர்ப்பு முறையை நாம் அனுசரிக்கத் தொடங்க வேண்டுமாயின், அதற்கு இந்தக் காலமே சரியான காலம். அந்த வருஷமே சரியான வருஷம். இந்த மாஸ்மே நல்ல மாஸம். இன்றே நல்ல நாள் இந்த முகூர்த்தமே தகுந்த முகூர்த்தம்.

சகோதரிகளே! இப் போது பூமண்டலமெங்கும் விடுதலைப் பெருங்காற்று வீசுகிறது. கொடுங்கோலரசர்