பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

குச் சொல்லிவிட்டுப் போகிறேன். கலியுகம் ஐயாயிரம் வருஷத்துக்குப் பிறகு ஒரு புதுயுகம் பிறக்கும். அதுதான் கலியுகத்துக்குள்ளே கிருதயுகம். அப்போது இந்த உலகமே மாறும். அநியாயங்களெல்லாம் நொறுங்கி, தவிடுபொடியாகி விடும். நாலு குலம் மறுபடியேற்படும், அந்த நாலு குலத்தாரும் வெவ்வேறு தொழில் செய்து பிழைத்தாலும், ஒருவருக்கொருவர் அநியாயம் செய்ய மாட்டார்கள்; துரோகம் செய்யமாட்டார்கள். அன்பே தெய்வமென்று தெரிந்து கொள்ளுவார்கள். அன்பிரு தால் குழந்தையும் தாயும் ஸ்மானம்; ஏழையும் செல்வனும் ஸ்மானம்; படித்தவனும் படியாதவனும் ஸ்மானம்; அன் பிருந்தால் மனிதனும் தெய்வமும் ஸ்மானம்; அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும். அப்போது மாதம் மூன்று மழை நேரே பெய்யும். பஞ்சம் என்ற வார்த்தையே இராது. தெற்கு தேசத்தில் பிராமண குலத்தில் கபில முனிவரும் அகப்பேய்ச் சித்தரும் திரும்பி அவதாரம் செய் வார்கள். அவர்கள் ஊரூராகப் போய் ஜனங்களுக்கு தர்மத்தைச் சொல்லி ஜாதி வழக்கை யெல்லாம் தீர்த்து வைப்பார்கள். அப்போது தர்மம் நிலை பெற்று நிற்கும். நீ இருக்கும்போதே இந்தப் புதிய யுகம் ஆரம்பமாய்விடும் உன் கண்ணுலே பார்ப்பாய்’ என்று என் தகப்பணு சொன்னர்.”

இங்ஙனம் அந்தக் கிழச் சாம்பான் சொல்லி முடி தான். பிறகு நேரமாய் விட்டபடியால் சபையைக் கலைத் விடலாமென்று நான் சொன்னேன். சேஷய்யங்கா அந்தக் கிழச்சாம்பானைப் பல வார்த்தைகள் சொல்லி புகழ்ந்தார். பிறகு அவ்விருவரும் தனியாகப் போ ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பால் சேஷய், கார் செம்படவன் கையில் இன்னும் கால் ரூபா கொடுத்து, ‘என்னல் உனக்கு நஷ்டமேற்பட்டதற்குச்