பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

பொது சந்தோஷமும் மேன்மேலும் விருத்தியடைவதற் குரிய உபாயங்களே இடை விடாமல் அனுஷ்டித்துக் கொண்டிருப்பதே ராஜாங்கத்தின் கடமையாவது.

குடிகள் ராஜாங்கத்தைத் தம்முடைய நன்மைக்காகவே சமைக்கப்பட்ட கருவியென்று நன்முகத் தெரிந்துகொள்ள, வேண்டும். குடிகளுடைய இஷ்டப்படியே ராஜ்யம் நடத்தப் படவேண்டும். தீர்வை விதித்தல், தீர்வைப் பணத்தை பலதுறைகளிலே வினியோகித்தல், புதுச்சட்டங்கள் சமைத் தல், பழைய சட்டங்களை அழித்தல் முதலிய ராஜாங்கக் காரியங்களெல்லாம் குடிகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி களின் இஷ்டப்படியே நடத்தவேண்டும்.

குடிகளின் நன்மைக்காகவே அரசு ஏற்பட்டிருப்பதால், அந்த அரசியலைச் சீர்திருத்தும் விஷயத்தில் குடிக ளெல்லாரும் தத்தமக்கு இஷ்டமான அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை இவர்களுக்கு உண்டு. இந்த விஷயங் களையெல்லாம் உபாத்தியாயர்கள் மாணக்கர்களுக்கு கற்பிக்குமிடத்தே, இப்போது பூமண்டலத்தில் இயல் பெறும் முக்கியமான ராஜாங்கங்கள் எவ்வளவு தூரம் மேற்கண்ட கடமைகளைச் செலுத்தி வருகின்றன என்பதை யும் எடுத்துரைக்க வேண்டும்.

மேலும், உலகத்து ராஜாங்கங்களில் சுவேச்சாராஜ்யப் ஜனப்பிரதிநிதியாட்சி, குடியரசு முதலியன எவையென் பதையும், எந்த நாடுகளில் மேற்படி முறைகள் எங்ஙனம் மிசிரமாகி நடைபெறுகின்றன என்பதையும் எடுத்து காட்டவேண்டும்.

மேலும், உலகத்து கிராம பரிபாலனம், கிராம சுத்தி வைத்தியம் முதலியவற்றில் குடிகளனைவரும் மிகுந் சிரத்தை காட்ட வேண்டுமாதலால், மாளுக்கர்களுக் இவற்றின் விவரங்கள் நன்முக போதிக்கப்படவேண்டு.