பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

யுள்ளவகை யிருந்தாலும் அல்லது நாஸ்திகனக இருந்தா, லும் இந்த வழியை அனுசரிக்கலாம். நாஸ்திகன் அறியக கடவது யாதெனில்,

“இவ்வுலகம் நமது தாய் என்பது.

‘உலகம் என்னிடம் பகைமையுடைய வஸ்துவில்லை உலகவனத்தில் நான் ஒரு மலர்...உலகம் என் அறிவுக்கு வசப்படுவதை அனுபவ த் தி லே கண்டிருக்கிறேன் உலகம் என்னிடம் அன்பு பூண்டது. இந்தச் செய்தியை ஸாமான்ய மதியுடைய எவனும் தன் உள்ளத்திலே பதியக் செய்துகொள்ளுதல் சிரமமில்லை. உலகம் நமக்குப் பிரதி கூலமாக இருந்தால், இங்கே மூன்று கூடிணங்கள்கூட உயிருடன் வாழமுடியாது; ஆனால், உலகம் நமக்கு நோய் உண்டாக்குகிறதே. இறுதியில் நம்மைக் கொன்று விடுகிறதே; இதை நம்மிடம் அன்பு பூண்டதாக எங்ஙனம் சொல்லலாம்?’ என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்.

உலகம் நம்முடைய தாய். அது நமக்குத் துன்பங்கள் விளைவிக்கும்போது நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக் கிறது. மூடக்குழந்தையைத் தாய் அடிப்பதுபோலவும் கட்டிபுறப்பட்ட சதையை ரணவைத்தியன் அறுத்தெறிவது போலவும், உலகம் நம்மைத் துன்பப்படுத்துகிறது. பெரும் துன்பமடைந்து அதனல் பரிசுத்த நிலைபெற்ற மேதாவிகள் எல்லோரும் இவ்வுண்மையைக் கண்டு கூறியிருக்கிறார்கள்: திருஷ்டாந்தமாக, ஏழைத்தனம் பெரிய துன்பங்களில்ே ஒன்றென்பது மனித ஜாதியின் பொது அநுபவம். எனிலும் இதைக்குறித்து விக்டர் ஹ்யூகோ என்ற பிரான்ஸ் தேசத்ன் ஞானி யொருவர் பேசும்போது, வறுமைத் தீயில்ே ஸ்த்தில்லாத மனிதர் அழிந்து போகிறார்கள். ஸத்துேைக வர்கள் பத்தரை மாற்றுத் தங்கம்போல் தேறிச் சுடர்விகி மாண்பு பெறுகிறார்கள்’ என்று குறிப்பிடுகிரு.ர்.