பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

முயற்சிகள் செய்கின்றார். தமது நூல்களை வெளி யிடுவதற்குப் பெரியதொரு திட்டம் வகுக்கிரு.ர். அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்த வும் விரும்புகிறார். ஆனல் அவருக்குப் பொருள் உதவி செய்ய மக்கள் முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.

ஆல்ை, பாரதியார் தமது எழுத்துப்பணியை நிறுத்தவில்லை; சோர்வடையவில்லை.

இந்த நேரத்தில் எழுதியதே இக்கட்டுரை என்று கருதலாம்.

இக் கட்டுரை சிந்தித்தற்குரியது. தேசீயக் க்ல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்று பாரதியார் விரும்பினர் என்பதை இதில் அறி கிருேம்.

முதலாவது தேசீயக் கல்வியென்றால் அது தாய் மொழியில் அமையவேண்டும். அப்படி யில்லாவிட்டால் அது தேசீயக் கல்வியாக, மாட்டாது.

ஸ்லேட், பென்சில் என்பவற்றிற்குக்கூடத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவர் எண்ணம். இக்காலத்தில் உருவாகிப் பழக்கத்திற்கு வந்துள்ள கலைச்சொற் கள் அன்று இருந்திருந்தால் நிச்சயம் அவற்றையே கையாண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியருக்குக் குறைந்தது 30 ரூபாய் சம்பளம் என்று அவர் கூறுவது அக்காலத்திற்குப் பொருந்தியதேயன்றி, எக் காலத்திற்கும் அவர் சம்பளம் நிர்ணயம் செய்யவில்லை.