பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மட்டும் இங்கு எடுத்துத் தருகிறேன். பாரதி தமிழ் என்ற எனது நூலில் கால வரிசைப்படி இக் கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. அதிலிருந்து எடுக்கப்பட்டது.

தீண்டாமை என்ற கொடுமை நமது நாட்டிலிருந்து அகற்றப்படா விட்டால் நமக்கு ஸ்வராஜ்யம் வராது என்று காந்தியடிகள் எழுதிய கருத்தைப் பற்றி பாரதியார் தமது எண்ணத்தைத் தெரிவிக்கிறார். தீண்டாமை என்ற அநீதி ஒழியவேண்டும் என்று இவர் பல இடங்களில் கவிதைகளிலும், உரைநடைக் க ட் டு ைர க் வரி லு ம் அழுத்தமாகக் கூறி யிருக்கிரு.ர். ‘பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை” என்ற கவிதை வரிகளை யார்தான் மறக்க முடியும்? இந்நூலில் இதே கருத்தை வலியுறுத்தும் பல இடங்களே வாசகர் கள் கவனிக்கலாம்.

ஆனல் தீண்டாமை ஒழிந்தால்தான் ஸ்வராஜ்யம் கிடைக்கும் என்ற கருத்தைப் பாரதியார் ஏற்றுக்கொள்ளவில்லை. தீண்டாமை இந் நாட்டிலே இன்றும் இருக்கவே செய்கிறது: ஆனல் சுதந்திரம் நாம் அடைந்து விட்டோம். ஆனல் இக் கொடுமை மறையும் போதுதான் உண்மையான சுதந்திரம் நாம் பெற்றவர் களாவோம் என்பது காந்தியடிகளுக்கும் நம் கவிஞருக்கும் ஒப்பமுடிந்த ஒர் உண்மை என்பது வெளிப்படை. இந்து சமூகத்தில் இது ஒரு பெருங் களங்கமாக இருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அநீதிகள் உள்ளவரை பலவகை