பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I13

வேதங்களில் பல இடங்கள் வசன கவிதை களாகவே இருக்கின்றன.

இவற்றையெல்லாம் கண்டறிந்த பாரதியார் தாமும் இம் முயற்சியிலே ஈடுபடுகிறார். புதிய யாப்பு முறையில் அவர் சானெட் என்ற 14வரிப் பாடலையும் தமது இலக்கிய முயற் சி யி ன் தொடக்க காலத்திலேயே எழுதியுள்ளார். தனிமை இரக்கம், யான், சந்திரிகை என்ற மூன்று பாடல்களும் இதற்குச் சான்றாக நமக்குக் கிடைத் திருக்கின்றன.

பின்னல் மக்களுக்கு எளிதாக உணர்த்துவ தற்காக ஆநந்தக் களிப்பு, நந்தனர் கீர்த்தனை மெட்டுகள், நொண்டிச்சிந்து முதலிய தமிழ் மக்களுக்குக் பழக்கமான யாப்பு முறைகளைக் கையாள்கின்றார். பிறகு புதிய கீர்த்தனை முறை களையும் படைக்கிரு.ர்.

ஆனல் புதிய யாப்பு வகையான வசன கவிதையையும் அவர் சோதனை செய்யாமல் விடவில்லை. இதிலும் அவர் நல்ல வெற்றி பெற் றுள்ளார் என்பதை அவருடைய வசனகவிதை களின் வாயிலாக அறியலாம். புதுமரபுக்கவிதை களை எழுதுகின்ற இக்காலக் கவிஞர்களும் பாரதி யாரையே தமது முன்னேடியாகக் கருதுகின்றனர். ஒரு லட்சிய நகரத்தை வால்ட்விட்மான் கற்பனை செ ய் கி ரு ர். அது பாரதியாருக்குப் பிடித்தமான, மிகப் பிடித்தமான ஒன்று என்று கூறத்தேவையில்லை. ஆகவே அதைப் பற்றி இக் கட்டுரையிலே சுருக்கமாகக் குறிப்பிடுகின்றார்.) வால்ட் விட்மான் என்பவர் சமீபகாலத்தில் வாழ்ந்த அமெரிக்கா (யுனைட்டெட் ஸ்டேட்ஸ்) தேசத்துக் கவி.