பக்கம்:தேன்பாகு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கங்கைக் கரையில் ஒருபிராமணர் கங்கையின் மகாத்மியத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். "கங்கையில் நீராடினால் எல்லா விதமான பாவங்களும் போய்விடும். கைலாசம் போவது ஏன்? என்று சொன்னார்.

கைலாசத்திலிருந்த பரமசிவனைப் பார்த்துப் பார்வதி, "கங்கையில் முழுகினவர் எல்லோரும் பாவங்கள் நீங்கிக் கைலாசத்துக்கு வந்து விட்டால் இங்கே இடம் கொள்ளாதே!" என்றார்.

பரமசிவன், "போடி, பைத்தியக்காரி! கங்கையில் குளிப்பவர்கள் எல்லோரும் நம்பிக்கையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/28&oldid=1396514" இலிருந்து மீள்விக்கப்பட்டது