பக்கம்:தேன்பாகு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


நாளும் மறைவாக உள்ளே போய் என்னவோ செய்கிறீர்களே என்று கவனித்தேன். குட்டு வெளிப்பட்டது. நீங்கள் வேறு ஒரு பெண்ணை உள்ளே அந்தப் பெட்டியில் வைத்திருக்கிறீர்கள் என்பது இன்றைக்கு எனக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் உங்களோடு வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அவளையே கட்டிக் கொண்டு அழுவுங்கள்” என்று அழத் தொடங்கினாள்.

அவள் கணவர் ஒன்றும் தெரியாமல் விழித்தார். அப்போது அங்கே ஒரு புத்த சந்நியாசி வங்தார். அந்தக் காலத்திலேயே சீன தேசத்தில் புத்த மதம் பரவியிருந்தது. அங்கங்கே புத்தசன்னியாசிகள் இருந்துமக்களுக்கு உபதேசம் செய்துவந்தார்கள். அவர்கள் தம்தலையை மொட்டையடித்திருப் பார்கள். அவர்களை பிட்சுகள் என்பார்கள்.

வீட்டுக்குள் வந்த பிட்சு கணவன் மனைவி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். "ஏன் சண்ட போடுகிறீர்கள்?"என்று அவர் கேட்டார்.

"இவர் வேறு ஒரு பெண்ணைக் கொண்டு வந்து இந்த அறையில் பெட்டியில் வைத்திருக்கிறார். எனக்குத் தெரியாமல் ஒவ்வொருநாளும் அவளைப் பார்த்துப் பேசி வருகிறார்"என்று. அவள் குறை கூறினாள்.

"அப்படி நான் செய்யவில்லை, இவள் சொல் வது வீண்பழி" என்றார் கணவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/34&oldid=1302172" இலிருந்து மீள்விக்கப்பட்டது