பக்கம்:தேன்பாகு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18


பார்த்தான். அவரைத் கண்டு அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று நாமும் இப்படி யாகம் செய்தால் நம்மிடத்திலும் பலர் வருவார்கள். வந்து பணிவார்கள் என்று எண்ணினான்.

முனிவர் இருந்த காட்டுக்கு அடுத்த காட்டில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு யாகம் செய்யலானான். தன்னுடைய அரண்மனைச் சேவகர்களை அழைத்து வந்து யாகத்துக்கு வேண்டிய வேலைகளைச் செய்யச் சொன்னான். ஊரிலிருந்து நெய்யை வருவித்து யாகம் செய்தான். அப்போது யானைகள் அங்கே வந்தன. அவற்றை அடித்து ஒட்டினான். குரங்குகள், வங்தன. அவற்றைக் கல்லால் எறிந்து ஒட்டச் செய்தான். அந்த யாகத்துக்கு அவனுடைய பணியாட்கள் வந்தார்களேயன்றி வேறுயாரும் வரவில்லை.

பாதி யாகம் கடந்து தொண்டிருந்த போது சில யானைகள் துதிக்கை நிரம்ப நீரை முகந்து கொண்டுவந்து யாகத்தில் விசிறின. அக்கினி அவிந்து போயிற்று. அரசனால் துரத்தப்பட்ட யானைகள் அவை. அப்படியே அவன் வேலையாட்கள் துரத்திய குரங்குகள் அங்கே இலைகளையும் முள்ளையும் பறித்துப் போட்டன. முனிவர் செய்த யாகத்திற்கு விலங்குகள் உதவி செய்தன. ஆனால் இந்த அரசன் செய்த யாகத்திற்கோ அவை தடைகளை உண்டாக்கின. அரசன் இந்த நிலையை அறிந்து கோபம் கொண்டான். யாகத்தை நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்து கொண்டான். உண்மையான பக்தியுடனும் நம்பிக்கையுடனும் எல்லாப் பிராணிகளிடத்தும் அன்புடனும் செய்தால்தான் யாகம் பலிக்கும் என்ற உண்மை அவனுக்குத் தெரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/20&oldid=1267784" இலிருந்து மீள்விக்கப்பட்டது