பக்கம்:தேன்பாகு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


"இங்கே உட்காரப்பா!"என்று, சொல்லி அந்தக் கூலியாள் தான் கொண்டு வந்திருந்த கட்டுச்சோற்றை எடுத்து அரசன் கை நிறையக் கொடுத்தான். அரசன் அங்கேயே சுவைத்து உண்டான். "அப்பா, நீ பரம உபகாரி, பசித்து வந்தவருக்கு இல்லை என்னாமல் சோறு கொடுத் தாயே!" என்று சொன்னான். "நான் என்ன ஐயா செய்து விட்டேன்? ஒவ்வொருவர் பெரிய தர்ம சத்திரம் கட்டி வைத்திருக்கிறார்கள்.நான் ஏதோ கொண்டு வந்திருந்த இந்தப் பழஞ்சோற்றில் சிறிது கொடுத்தேன். இது ஒரு பெரிய காரியமா?" என்றான் அங்தக் கூலியாள்.

"நீ தந்த சோற்றினால் என் பசி ஆறி விட்டது. நீ நெடுங்காலம் வாழ்வாயாக" என்று வாழ்த்தி, அவன் எங்கே இருக்கிறான் என்ற விவரத்தையும் கேட்டுக்கொண்டு சென்றான்.

மறுநாள் அரசன் அந்தக் கூலிக்காரனிடம் ஒரு சேவகனை அனுப்பி, "உன்னை அரசர் வரச் சொன்னார்" என்று சொல்லச் செய்தார். அந்தச் சேவகன் அவனிடம் சென்று அழைத்தபோது அவன் வெலவெலத்துப் போனான். 'நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! அரசன் நம்மை எதற்காகக் கூப்பிடுகிறார்? என்று எண்ணி நடு நடுங்கிக் கொண்டே சேவகனுடன் சென்றான்.

அரசனுடைய அரண்மனைக்குள் சேவகன் அவனை அழைத்துச் சென்றான்.உள்ளே அரசன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அருகில் இரு புற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/44&oldid=1338653" இலிருந்து மீள்விக்கப்பட்டது