பக்கம்:தேன்பாகு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நீராடி விட்டுக் கையில் ஒரு பாத்திரத்தை ஏந்திக் கொண்டு வீடு தோறும் சென்று 'கிருஷ்ணாய நமஹ' என்று சொல்லி நிற்பார். வீட்டுக்காரர் போடும் அரிசியை வாங்கிக் கொள்வார். பல வீடுகளில் கிடைக்கும் அரிசியைக் கொண்டு அவர் ஜீவனம் நடத்தி வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்குள் சென்று, "கிருஷ்ணாய நமஹ" என்று சொல்லி நின்றார். கூடத்தில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/46&oldid=1396527" இலிருந்து மீள்விக்கப்பட்டது