பக்கம்:தேன்பாகு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


தவளையையும் தின்று தின்று சலித்துப் போய் விட்டது. நீ தான் பாக்கியசாலி, மனிதர் தின்னும் தின்பண்டங்களெல்லாம் உனக்குக் கிடைக்கின்றன" என்று நயமாகச் சொல்லத் தொடங்கியது.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த காக்கை தன் வாயிலிருந்த இட்டிலியை மரத்தில் இருந்த சிறிய பொங்தில் வைத்துவிட்டு, "கா, கா" என்று கூவியது.

நரி மறுபடியும் காக்கையைப்பார்த்து, "தம்பி நீ பிறருக்குக் கொடுக்காமல் எதையும் உண்ணாதவன். இந்த இட்டிலியைத் தின்ன உன் உறவினர்களை "கா, கா’ என்று அழைக்கிறாயே, நான் இருக்கிறேன். என்னையும் உன் சொந்தக்காரனாக எண்ணி எனக்கு ஒரு துண்டாவது கொடு" என்று கெஞ்சிக் கேட்டது.

காக்கைக்குக் கொஞ்சம் மனசு இரங்கியது, அந்த இட்டிலியை மறுபடியும் கவ்விக்கொண்டு கீழே இருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து கொண்டது.

அதற்குள் கரி என்னவோ நினைத்துக் கொண்டது; "தம்பி ஒரு விஷயம் சொல்கிறேன், கேட்கிறாயா? இங்த இட்டிலி வெறும் இட்டிலி யாக இருக்கிறது. மனிதர்கள் மிளகர்ப்ப் பொடி என்றும், சட்டினி என்றும் சில பதார்த்தங்களை இதற்கு உபயோகிப்பார்களாம். நாமும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/24&oldid=1269876" இலிருந்து மீள்விக்கப்பட்டது