பக்கம்:தேன்பாகு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


தோன்றியது, மெதுவாக நாக்கினால் அதை நக்கிப்பார்த்தது. அப்போது நரிக்கு இட்டிலியை ஒரே விழுங்காக விழுங்கிவிட வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. 'காக்கை வந்தால்...?' என்று எண்ணியது. 'வந்தால் என்ன செய்யும்? நாம் ஒடிப்போய் விடலாம்' என்று அடுத்தபடி ஓர் எண்ணம் வந்தது.

உடனே, துணிந்து இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துத் தின்றது. அந்தச்சமயத்தில் காக்கை திரும்பி வந்து விட்டது. வாயில் ஒரு சிறு கிண்ணத்தோடு பறந்து வந்தது. அந்தக் கிண்ணம் நிறைய மிளகாய்ப் பொடி இருந்தது. வரும்போதே நரியைப் பார்த்தது. நரி இட்டிலியின் ஒரு பாகத்தைக் கடித்துக் கொண்டிருந்தது. நரி முழுவதையும விழுங்கிவிடப் போகிறது என்றே அது எண்ணியது. உடனே இரைந்த குரலில், நரி அண்ணா, அவசரப்படாதே அந்த இட்டிலியை நீயே தின்னலாம, இந்த மிளகாய்ப் பொடியை போட்டுக் கொண்டு தின்னலாம். எனக்கு வேண்டாம். பாவம் இவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருந்தாயே. எனக்கு வேறு இட்டிலி கிடைக்கும்' என்றுசொல்லிக் கொண்டே பக்கத்தில் வந்தது.

நரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இட்டிலி முழுவதையும் தானே சாப்பிட வேண்டும் என்ற பேராசை அதற்கு இருந்தது. ஆனாலும் காக்கை இப்படிச் சொல்லும் என்று அது எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/26&oldid=1301587" இலிருந்து மீள்விக்கப்பட்டது