பக்கம்:தேன்பாகு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


மும் சேவகர்கள் கையில் துப்பாக்கியுடன் நின்று: கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டதும் அவனுக்கு நடுக்கம் அதிகமாயிற்று.

அரசன் அவனைக் கண்டதும், "நேற்று நீ ஒர் ஏழைக்குச் சோறு கொடுத்தாயா?" என்று கேட்டான், .

"கொடுத்தேன், என்னிடம் பழைய சோறு தான் இருந்தது. அதைத்தான் கொடுத்தேன்" என்றான்.

"சரி, அப்படி உட்கார்" என்று சொன்னான். அந்தக் கூலிக்காரன் நடு நடுங்கியபடியே உட்கார்ந்தான்.

"கேற்று உன்னிடம் வந்த ஏழை நான் தான். நீ வஞ்சகம் இல்லாமல் உன்னுடைய சோற்றைப் பகிர்ந்து கொடுத்தாய். நீ செய்த உபகாரத்தை மெச்சுகிறேன். இனிமேல் நீ ஏழையாக வாழ வேண்டாம், உனக்கு நிலங்களைத் தருகிறேன்" என்று சொல்லிச் சில நிலங்களை அவனுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்.

சபையில் இருந்த செல்வர்கள் எல்லாம் இதைக் கேட்டுத் திகைத்தார்கள். ஊரில் உள்ள வர்களோ அரசனுடைய பெருந்தகையைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/45&oldid=1338658" இலிருந்து மீள்விக்கப்பட்டது