பக்கம்:தேன்பாகு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
53



"அவள் அழகு ஒன்றே போதுமே! மற்றதெல்லாம் எதற்கு? சரி; நான் அடுத்த வாரம் வருகிறேன். இவளைத் தைரியமாக என்னோடு அனுப்புங்கள். என் தாய் தகப்பனாருக்கு இவளைக் காட்டி என் கருத்தைச் சொல்வேன். அவர்கள் என் விருப்பத்துக்கு மாறாக ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்த வாரம் இவளை அனுப்பத் தயாராக இருங்கள், உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் இதோ என்னுடைய முத்திரை மோதிரம்.இதைத் தந்து விட்டுப் போகிறேன்” என்று சொல்லித் தன் கையிலிருந்த மோதிரத்தைக் கழற்றி அவர்களிடம் கொடுத்தான்.

அவர்கள் சிறிதே யோசித்தார்கள், பிறகு வலிய வரும் சீதேவியை உதைத்துத் தள்ளக் கூடாது. என்று அவனுக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

அடுத்த வாரம் அரசகுமாரன் குதிரையின் மேல் வந்தான். அவன் வருவதை எதிர்பார்த்திருந்த கனகவல்லியின் தாய் தந்தையர் அவளை அவனுடன் அனுப்பினார்கள். அவன் அவளைத் தன் குதிரையின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.

புறப்பட்ட அடுத்த கணத்தில், "ஓய், நில், நில்” என்ற சத்தம் கேட்டது. சப்பைக்கால் சுப்பன்தான் அப்படிக் கத்தினான். தனக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/55&oldid=1302133" இலிருந்து மீள்விக்கப்பட்டது