பக்கம்:தேன்பாகு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறைய கத்தரிச் செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக் கவனித்துப் பார்த்துப் பராமரித்து வந்தான். செடிகளெல்லாம் தளதளவென்று வளர்ந்து பூத்துக் காய்க்கத் தொடங்கின. நல்ல மண்ணாக இருந்தமையாலும், மட்டியப்பனுடைய கவனிப்பினாலும் ஒவ்வொரு செடியும் குலுங்கக் குலுங்கக் காய்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்பாகு.pdf/59&oldid=1396531" இலிருந்து மீள்விக்கப்பட்டது