பக்கம்:அன்பு மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிற்றுரை

3


பதில்லை. அதுபோல அந்த ஊதுவத்தியினுடைய மணம் அவர்களது பெருமை. அதை வைத்திருக்கிற ஊதுவத்தியாகிய கறுப்பன் நான். ஊதுவத்தி எரிந்து போகும், மனம் நிற்கும். ஆகவே படிக்கிற பக்தர்களுக்கு இந்தப் பாடல்களிலே உள்ள வடிவமோ சுவையோ மனத்தை மயக்காவிட்டாலும், இவற்றினூடே இருக்கும் பொருள், நம்முடைய சுவாமிகளுடைய புகழ், அவர்களுடைய உண்மை, உள்ளத்திலே பதிந்து விருப்பூட்டுவதற்குக் காரணமாகிக் கொஞ்சம் மதிப்பைப் பெறும் என்று நினைக்கிறேன். ஆண்டவனுடைய திருவருளினாலே, சுவாமிகளின் பேராசியினாலே, இந்தப் புத்தகத்தை இந்த அளவிலே வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததற்காக நான் பெருமிதம் அடைகிறேன். சுவாமிகளுடைய திருவடியை வந்தித்துச் சிந்திக்கிறேன்.

இந்தத் திருநாளில் பல பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். சுவாமிகளுடைய அருளாழியிலே துளைகின்றவர்கள் ஒருவர் இருவர் அல்லர். இது குட்டையா, குளமா, ஏரியா? இது கடல். கடலிலே துளையமாடுகிறவர்கள் எத்தனை பேர்! அந்த அந்த ஊரிலே துறைகள் ஏற்படுத்திக்கொண்டு அவர்கள் துளையமாடுகிறார்கள். இந்தத் துறை அருகருகிலேயா இருக்கிறது? விசாகப்பட்டினத்திலே கடற்கரை இருக்கிறது; கன்யாகுமரியிலும் இருக்கிறது. இரண்டும் ஒரே கடலின் கரையானாலும் நெடுந்துாரத்தில் உள்ளன; ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை. ஆனால் கடற்கரை என்பதனால் தொடர்புடையது.

இந்தத் திருவண்ணாமலையில் ஓர் அறையிலே இது நடக்கிறது. இன்று சிவகாசியிலே அன்னதானம் விசேஷமாக நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். பஜனைகளெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/9&oldid=1303734" இலிருந்து மீள்விக்கப்பட்டது