பக்கம்:அன்பு மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அன்பு மாலை

பொங்கிய ஆர்வத் தன்பர்
புரிவுடன் வணங்கிப் போற்றும்
துங்கனாய் நிற்கும் ராம
சுரத்குமார் தாள்கள் போற்றி

பங்கம் - குற்றம், புரிவு -விருப்பம், துங்கன் - பரிசுத்தன்.

விலையிலா மாணிக் கம்போல்
விளங்கிய சுத்த ஆன்மா
மலைவற நின்று முத்தி
மாண்புறக் காண வேண்டும்:
அலைவுறல் நீக்கல் வேண்டும்,
அறிவினை ஆக்கல் வேண்டும்:
தொலைவறச் சொல்லும் ராம
சுரத்குமார் மலர்த்தாள் போற்றி!

தொலைவு அற - அழிவு நீங்க.

வேயுறு தோளி பங்கன்
விடமுண்ட கண்டன் எங்கள்
நாயகன், ராமன், கண்ணன்,
நாதராம் யாவர் தாமும்
மேயஇங் கிவனாய் வந்தார்:
விளங்கிய அருணை தன்னில்
தூயனாய் நிற்கும் ராம
சுரத்குமார் பதங்கள் போற்றி!

வேய் உறு தோளி பங்கன் - மூங்கிலைப்போன்ற தோளையுடைய
உமாதேவியாரைத் தன் பாகத்திலே கொண்ட சிவபெருமான்.

வரிசையாய்ச் செல்வம் பெற்றார்,
மங்கையர் சுகத்தை உற்றார்,
தரிசெலாம் நிலமாய் ஆக்கித்
தாழ்வரும் பயிர்கள் செய்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/24&oldid=1303417" இலிருந்து மீள்விக்கப்பட்டது