பக்கம்:அமர வேதனை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிட்டி பஸ்



நடந்தால் வலிக்கும்;

மணிக் கணக்கில்

காத்து நிற்பதே சுகமாம்

என்று தம் தவம் பயின்று,

உன்னைக் கண்டதும் சாடி,

இடித்து நெருக்கும் கும்பலில்

முட்டி மோதி ஏற,

உள்ளே!

மண்டிடடும் கூட்டம்

முறைத்து நோக்கி முனங்க,

எட்டிப் பிடிக்க இயலாது

மேல் கம்பி தொட்டுத்

தொங்கி நின்று தவித்தாட,

எப்படியோ ஓரிடம் சேர்வோம

எனத் திணறித் திண்டாட,

உதவிடும் சிட்டு பஸ்ஸே!

என்றும் உனை நாடச் செய்தாய்

உன் புகழ் தான்

என்னே என்னே!


1971


அமர வேதனை
26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/28&oldid=1201900" இலிருந்து மீள்விக்கப்பட்டது