பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. முதலாம் விக்கிரமாதித்தனின்

கத்வல் பட்டயங்கள்

சாளுக்கியரும் பல்லவரும்

தக்காணத்தில் ஆண்ட பழைய அரச பரம்பரையினருள் சளுக்கியர் சிறப்பிடம் பெறுவர். இம்மரபினர் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டவர்; பெருவலியும் பெருவீரமும் படைத்தவர். இவர்களுடைய கொடி சூகரம். அதாவது பன்றியாகும். இம்மரபினருள் முதலரசன் விசயாதித்தன் என்பவன வன். இவனும் இவனுக்குப்பின் ஆண்ட அரசர்களும், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ அரசருடன் இடையறாது போர் செய்தவராகவே காணப் பெறுகின்றனர். பல்லவு அரசருள் கி.பி. 615 முதல் ஆண்டவன் மகேந்திரவர்மன் எனப் பெறுவன். அவன் காலத்துச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலகேசி. இவன் கி.பி. 609முதல் 642 வரை ஆண்டவன். இப்புலகேசி, மகேந்திரவர்ம பல்லவனுக்குத் தோற்று ஓடினும், பின்னர் இவன் மகன் நரசிம்மவர்மன்(கி.பி. 630668) அரசு செய்த காலத்திலும் மீண்டும் படையெடுத்து வந்து தோற்றுச் சென்றவன். இப்புலகேசி காலத்தில்தான் வாதாபி பல்லவ வீரர்களால் (எறத்தாழக் கி. பி. 640ல்) அழிக்கப் பெற்றது. இப் புலகேசியின் மகன், விக்கிரமாதித்தன் I (655-680) எனப் பெறுவான். இவனும், நரசிம்ம பல்லவ அரசனுடைய பேரனாகிய பரமேசுவரவர்மன் (670-685) காலத்தில் பல்லவ நாட்டின் மேல் படையெடுத்துக் காவிரிக் கரை வரையிலும் வந்தான்; உரகபுரம் என்னும் இடத்தில் பாடி வீடு அமைத்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/33&oldid=1388421" இலிருந்து மீள்விக்கப்பட்டது