பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14



கிணற்றில் காணப்பட்டதாம்! கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலில் கல்துரவுக்குத் தென்புறம் காட்டில்² பாழ் மண்டபத்தில் எழுதியிருக்கும் சாஸனங்களில் ஒன்று (ஷெ நூல்³ சாஸனம் 676) இச் செய்தியைப் பின் வருமாறு கூறும்;

“வாறணாசியில்4 கெங்கைக்கரை யொறத்தி5 லகப்பட்டுயிருந்த எலுமிச்சம்பழம் சிங்க கொணத்தில்6 கண்டு சொழன் 7 மனம்......... ந்து தென்று பெறியோர்கள் 8 சொல் படி கல்வெட்டு”

வாரணாசி சமான மாகுமே!

“மனத்தான் வகுக்கவும் எட்டாத இக்கோயில் முற்காலத்தில் எவ்வளவு சீரும் சிறப்பும் உடையதாயிருந்தது என்பதை அளவிட்டுரைத்தல் ஒல்லாது. அத்தகைய பெருநகர் காசி கூேடித்திரத்தைக் காட்டிலும் மிகச் சிறந்ததென அக்காலத்து மக்கள் மதித்திருந்தனர் போலும்! இதனையே பின் வரும் கல்லெழுத்து அறிவிக்கின்றது:-

“வாறணாசி சமான மாகுமெ சொளமண்டல வா(ழி)’’

முடிப்புரை

இக் கோயில் இந்நாளில் புறக்கணிக்கப் பெற்ற நிஐலயில் இருந்து வருகிறது; இத்திருக்கோயில் தமிழ்ப் பெருமகனின் வெற்றிச் சிறப்புக்கு நினைவாக அமைந்தது; அவ்விரப் பெருமகனின் சிவபக்திக்குச் சின்னமாய் இலங்குவது; கருவூர்த் தேவரால் திருவிசைப்பாப் பாடப் பெற்ற பெருமையுடையது; “வாரணுசி சமான மாகுமே” என்று புகழப் பெற்றது. இத் தகைய சீரும் சிறப்பும் பொருந்திய திருக்கோவிலுக்குப் பலரும் சென்று வழிபடல் வேண்டும்; அங்கு ஒதும் திருவிசைப்பா முழக்கம் எங்கும் பரவ வேண்டும்; பல்லாற்றானும் முயன்று முன்னைய நிலையை எய்துவிக்க வேண்டும்! திருவருள் முன்னிற்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/21&oldid=980544" இலிருந்து மீள்விக்கப்பட்டது