பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. இரண்டாம் நந்திவர்மனின்

காசாக்குடி செப்பேடுகள்

பொது

இச் செப்பேடுகளைக் காரைக்காலுக்கு 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காசாக்குடி என்ற ஊரில் 1879-ல் பாண்டிச்சேரி (புதுச்சேரி)யினரான M. Jules de la Fon என்பவர் கண்டுபிடித்துப் படி எடுத்துக்கொண்டார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு பாரிஸ் பேராசிரியர் Julien Vinson அவர்கள் 1891ல் தமிழ்ச் சாசனங்களின் மாதிரி (Specimen de Paleographic Tamoule) என்று ஒரு ஆய்வுரை எழுதி வெளியிட்டார். அவ்வாய்வுரையின் படி யொன்று பேராசிரியர் உல்ஷ் (E. Hultzsch, Ph. D.) அவர்களுக்குக் கிடைத்தது. இவ் வாய்வுரையினால் அச் செப்பேடுகளின் சிறப்பையறிந்து உல்ஷ் துரைமகனார், இந்தியாவில் பிரஞ்சுப் பகுதிகளின் கவர்னர் அவர்கள் வழியாக, 1895-ல் அச் செப்பேடுகளின் சொந்தக்காரரிடம் இருந்து அவற்றைப் பெற்றுப் படி எடுத்துக் கொண்டார். அச் செப்பேடுகளின் மூலம், ஆங்கில மொழி பெயர்ப்பும், ஆய்வுரைகளும் 1895-ல் தென்னிந்திய சாஸ னங்கள், தொகுதி II, பகுதி III, பக்கம் 342 முதல் 361 வரை அச்சிடப் பெற்றுள்ளன.

இப்பொழுது இச்செப்பேடுகள் சென்னை அரசினர் பொருட் காட்சிச் சாலையில் உள்ளன. இச்செப்பேடுகள் குறித்த விரிவான விளக்கவுரை முப்பது செப்பேடுகள் என்ற நூல் 141180 பக்கங்களில் உள்ளன.

அவை பதினாரு செப்பேடுகள், ஒரே வளையத்தில் கோக்கப் பெற்றிருந்தன. அந்த வளையத்தின் மேல் நந்திச் சின்னம் பொறிக்கப் பட்டிருந்தது; நந்தி இடதுபுறம் திரும்பியிருப்பது; அதன் மேல் இலிங்கம் இருந்தது. அச் செப்பேடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/42&oldid=1388458" இலிருந்து மீள்விக்கப்பட்டது