பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அறிவியல் தமிழ்

வானத்தின் மீது பகலவனின் கதிர்கள் பரவுதல் விண்ணையளாவி ஓங்கி யுயர்ந்து நடம் புரியும் சிவபெரு மானின் செஞ்சடைகள் விரிந்து நிற்றலை ஒத்திருக்கின்றது. கதிரவன் கனன்று எழுங்காலத்தும் கண்ணுதலோன் ஆனந்தத் திருநடனம் புரியும்பொழுதும் அந்தணர்களின் அருமறை முழக்கம் எங்கும் எழுகின்றது. அவ்வமயம் கின்னரர்கள் இசை பாடுகின்றனர்; உயர்ந்தவர்கள் துதித்த நிலையிலுள்ளனர். தேவர்களும் முனிவர்களும் கைகூப்பிய நிலையில் காணப்பெறுகின்றனர். இதய கமலத்திலும் பொற்சபையிலும் ஆனந்தக் கூத்தாடும் ஆடலரசனைப் போலவே, வான் அரங்கில் 'கர, கர' வென்று சுழன்று அற்புதக் கூத்தினை நடத்துகின்றான் பகலவன். கூத்தன் நடனத்திற்கு ஏற்ப முழவு ஒலிப்பது போல, பகலவனின் நடனத்திற்குக் கடல் ஒலித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துகின்றது. இயற்கையில் ஈடுபட்டுக் களித்து நிற்கும் கம்பன் நம்மையும் இப்பாடல் வாயிலாக ஈடுபடுத்திக் களிக்கும்படி செய்கின்றான்.

மறையும் கதிரவன் : காலையில் கர, கர வென்று எழும் ஞாயிற்றின் எழிலில் ஈடுபட்ட நாம் மாலையில் மறையும் பகலவனின் பாங்கெழிலிலும் பங்கு பெறு வோம். இதற்கு மகா கவி பாரதியார் நமக்குக் கை கொடுத்து உதவுகின்றார். அத்தினபுரத்தை நோக்கிச் செல்லும் பாண்டவர்கள் பயணத்தில் பார்த்தன் பாலைப் போல் மொழி பிதற்றும் பாஞ்சாலிக்குப் பரிதியின் எழிலை விளக்கும் பாணியில் கவிஞன் களிப்புடன் பேசுகின்றான்: "பண்மொழி: வானத்தில் காணுந்தோறும் மாறி மாறி நவநவமாகத் தோன்றும் காட்சியைக் காண்பாயாக. இந்தப் பூவுலகில் யார் எண்ணரிய பொருள் கொடுத்து இத்தகைய தொன்றினை இயற்ற இயலும்? அன்பே, செழுஞ் சோதி வனப்பையெல்லாம் ஒரு சேரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/28&oldid=534047" இலிருந்து மீள்விக்கப்பட்டது