பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அறிவியல் தமிழ்

குறிப்பீட்டால், அப்பொழுது ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு பங்குள்ள ஒரு மையப் புள்ளியே அதன் உட்கருவினைக் குறிக்கும். மகிமாசி சித்தர் ஒருவர் ஒரு துளி நீரை உலகம் அளவு பெரியதாகச் செய்ய முடியு மானால், அதிலுள்ள ஒவ்வோர் அணுவும் ஒரு மீட்டர் குறுக்களவுடையதாக இருக்கும். அப்பொழுதும் உட் கருவின் குறுக்களவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குதான் இருக்கும். அதே சித்தர் ஒரு நீரிய அணுவினை 600 மைல் குறுக்க்ளவுள்ள கோளம் போல் விம்மி உப்பச் செய்தால் நடுவில் அதன் உட் கரு ஒரு பட்டாணி அளவு இருக்கக் காணலாம். எலக்ட்ரானோ இதனினும் மிகப் பெரியதாய், 30 அடி குறுக்களவுள்ள பெரிய உருண்டையாய், கோளத்தின் விளிம்பில் கிடக்கும். எனவே, அணு முழுவதும் பெரும் பாலும் காலியிடமே நிறைந்துள்ளது; எல்லாம் வெட்ட வெளியாகக் கிடக்கின்றது. கதிரவனுக்கும் கோள்கட்கும் இடையில் வெட்டவெளி இருப்பது போலவே, அணுவிலும் உட்கருவிற்கும் எலக்ட்ரான்களுக்கும் இடையில் எல்லாம் வெட்ட வெளியேயாகும். ஒருவர் அணுவைத் துளைத் து அதனுள் பறந்து செல்லக் கூடுமானால், அவர் எலக்ட்ரானையோ உட்கருவினையோ அடிக்கடிச் சந்திக்க முடியாது. இதனால்தான் உட்கருவினைத் தாக்கிச் சிதைக்க முயலுங்கால் தாக்கச் செல்லும் பொருள்கள் (வேகம் வளர்க்கப் பெற்ற நியூட்ரான்கள் போன்றவை) உட்கருவில் படாமல் வெட்டவெளியில் ஒடிப் போகின்றன.

அணுவின் உட்கருவிலுள்ள துகள்கள் மிக இறுகப் பிணைக்கப் பெற்றுள்ளன. நாம் இதுகாறும் அறிந்துள்ள ஆற்றல்கள் அனைத்திலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல் மிகப் பெரியது. இந்த ஆற்றலை உட்கருவின் išersollum f.sps' (Binding energy of the nucleus) are:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/46&oldid=534065" இலிருந்து மீள்விக்கப்பட்டது