பக்கம்:அமர வேதனை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வல்லிக்கண்ணன்


         வல்லிக்கண்ணன் (ரா. சு. கிருஷ்ணசாமி) திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தில் 19-11-1920ல் பிறந்தவர். பெரும்பாலும் சுயேச்சை எழுத்தாளராகவே வாழ்ந்து வருபவர். இருந்தாலும் 1944-1947 காலத்தில் 'கிராம ஊழியன்' இலக்கிய பத்திரிகை ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தவர். ஏராளமாக எழுதியவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் இன்னும் பல அம்சங்ககளே தொட்டிருப்பவர், பிரம்மச்சாரியான அவர் இப்போது தன்

கிராமத்தில் வாழ்ந்து வருகிார்.

அமர வேதனே
           பாரதிக்குப் பிறகு முப்பதுக்களின் பின் பாதியிலும் நாற்பதுக்கள் முன் பாதியிலும் ஒரு பத்தாண்டு காலத்தில் தமிழ் கவிதை துறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராஜகோபாலனும் ஆரம்பித்து வைத்த ஒரு இயக்கம். அந்த இரட்டையர்களின் அடிச்சுவட்டில் தானும் சேர்ந்துகொண்டவர் வல்லிக்கண்ணன்.
           மானிட வாழ்வின் அவல நிலே கண்டு வெதும்பிய ஒரு படைப்பு உள்ளம் அவருடையது. அநுபவப் புயல் அவருக்குள் கசப்பை அடிநாக்கு வரை ஏற்றி விட்டதால், நம்பிக்கை வரட்சி, ஏக்கம், வேதனே இவையே அவர் கவிதைகளில் அடி நாதமாக ஒலிக்கிறது. ஆழ்ந்த தீர்க்கமான எண்ணங்களே,

உணர்ச்சிகளே வெளியிடும் அவர் கவிதைகளின் நடை எளிய சாதாரண, பேச்சுப் பாங்கானவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/65&oldid=1183120" இலிருந்து மீள்விக்கப்பட்டது