பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



v

 'ஒசை பெற்றுயர் பாற்கடலாகிய' நாலாயிரப் பிரபந்தத்தில் ஆசைபற்றி முற்றவும் குடிக்க முடியாத தமக்கு, உரைக்கிண்ணத்தில் ஆழ்வார்கள் அளித்த தேனைப் பாலோடு கலந்து ஆசிரியர் அளித்துள்ளார். அமலனாதி பிரானை அடிமுதல் முடிவரை அநுபவித்து அறிந்த ஆசிரியர் அப்"பிரானுக்குப்' பிரானாகிய திருமாலின் அழகையெல்லாம் சொல்லிச் சொல்லித் தம்மையே மறந்து நிற்கிறார்.
  'கம்பன் கவி உண்டிட மால் அம்புவியில் வந்து அவதாரம் செய்தானோ' என்று பாடுவார் கவிமணி. இருசுடர் தோற்றமாம் இரண்டாம் கட்டுரை கம்பனை முழுதும் காட்டும் காட்சியாக விரிகிறது,
  அம்பலத்தே ஆடும் அம்பலவாணனின் திருக்கூத்தை அணுவின் ஆனந்தக் கூத்தாகவே கண்டு மகிழ்கின்றார் ஆசிரியர். அனுபற்றிய இன்றைய அறிவியற் கொள்கைகளை அன்றே தமிழ்ச் சான்றோர் அறிந்திருந்தனர் என்று எடுத்துக் காட்டியுள்ள திறம் பாராட்டத்தகுவது.
  தானே தனக்குவமை என்பது போலத் தன் சொல்லுக்குத் தானே இலக்கியமாகக் கம்பன் திகழும் திறத்தைக் "கம்பன் கண்ட மெய்ப்பொருள்' என்ற கட்டுரை காட்டுகிறது. 'கவிகளாகுவர் காண்குவர் மெய்ப்பொருள்' என்ற கம்பன் வாக்கில் தொடங்கி, பன்னீராயிரம் பாடல்களுள்ளும் புகுந்து, எங்கெல்லாம் கம்பன் 'இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தைக் கண்டானோ' அங்கெல்லாம் ஆசிரியர் நின்று, கவனித்துச் செல்கின்ற நிலையைக் காண்கிறோம்.
  ஐந்தாம் கட்டுரை சேந்தனாரையும் பெரியாழ்வாரையும் ஒப்பிட்டுப் பல்லாண்டு கூறுகிறது. ஆறும் எட்டும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/7&oldid=1282447" இலிருந்து மீள்விக்கப்பட்டது