பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ குற்றவாளி மாலதி : அவர் வந்ததும் நீங்கள் இரண்டு பேரும் சதுரங்கம் ஆட உட்கார்ந்து விடுவீர்கள். பிறகு உங்களுக்கு நேரம் போகிறதே தெரியாது. வாசு : அவன் இன்றைக்குச் சதுரங்கம் ஆட வரவில்லை. சினிமாவுக்கு நம்மோடு போகத்தான் வருகிருன். மாலதி நீங்கள் ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் ? வாசு : நான் லேட்டாக வந்தாலும் ஆபீசிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கு முன்னமேயே போன் மூலம் உனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டேனே ? உனக்குச் சிங்காரம் பண்ணிக்கொள்ள இரண்டு மணி நேரம் போதாதா ? மாலதி : எனக்குச் சிங்காரமே தேவையில்லை. நீங்கள் தான் இப்படியெல்லாம் சிங்காரம் செய்துகொள்ளச் சொல்லுகிறீர்கள். இதைப் போடு...அந்தச் சேலே யைக் கட்டு என்று...... வாசு : மாலதி, இந்த விவாதத்தை இப்போ ஆரம்பித்து விடாதே-பிறகு சினிமாவுக்குப் போகவே முடியாது. மாலதி : நான் இப்பொழுதே தயார். நீங்கள் டீ சாப் பிட்டதும் உடனே புறப்படலாம். உங்கள் நண்ப ருக்கும் டீ ரெடியாக இருக்கிறது. வாசு : மாலதி, அந்தக் காஞ்சீபுரம் நீலப் பட்டுப் புடவையை கட்டிக்கொண்டு வா. மாலதி (சிரித்துக்கொண்டே): பார்த்தீர்களா ? இப்போ யாரால் லேட் ஆகப் போகிறது ? வாசு லேட் ஒண்ணுமில்லை-இன்னும் நேரமிருக்கிறது. அதைக் கட்டிக்கொள்.