பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 குற்றவாளி மாலதி : இதை என்னிடம் எதற்குச் சொல்லுகிருய் ? மறுபடியும் ஒரு சூழ்ச்சியா ? ராகவன் (உறுதியான குரலில்) : முன்னுல் நான் சொன்ன சாட்சியங்கள் எல்லாம் அப்படியே என் னிடம் இருக்கின்றன. இப்பவும் வாசுதேவன் தப்ப முடியாது. மாலதி (கலவரத்தோடு) : அட பாதகா, மறுபடியுமா இந்த நாடகம் நடத்த வந்துவிட்டாய் ? ராகவன் : முன்னல் நடந்தது வெறும் ஒத்திகை. இப்பொழுது நடப்பதுதான் உண்மை. உங்கள் புருஷனைத் தப்பவைக்க வேண்டுமானல் என் னுடைய நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும். சுட்டுக் கொன்றது யாராக இருந்தாலும் சாட்சியங் களெல்லாம் அவரையே குற்றவாளியாகக் காட்டும். அதை நன்முக மனத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். மாலதி : அந்தக் கடிதமும் கைத்துப்பாக்கியும் எங்கே ? தோல் பை எங்கே ? ராகவன் : இதோ அவை என்னிடந்தான் இருக்கின்றன. (பையைக் காட்டுகிருன்) என்னுடைய நிபந்தனையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இன்னும் பதினைந்து நிமிஷங்களில் கடிதமும் துப்பாக்கியும் சரோஜினியின் பிணத்தின் அருகே சாட்சியாகக் கிடக்கும். நானே போலீசில் பிராது கொடுப்பேன். மாலதி : என் கணவர் எந்தவிதமான குற்றமும் செய்ய வில்லை. சரோஜினியையும் உன்னையும் சேர்த்து வைக்கவே உதவி செய்ய முன் வந்தார்.