பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குற்றவாளி போலீஸ் இன்ஸ்பெக்டரையும் இப்படி அடைத்து வைத்திருக்கிருயே? அதுதான் எனக்குக் கவலை. மின் சார விளக்கையும் போடக்கூடாதென்கிருய். சோமு (இன்ஸ்பெக்டரைப் பார்த்து) . ஏன் ஸார், உங் களுக்குச் சிரமமாக இருக்கிறதா? இன்ஸ் : சிரம மொன்றுமில்லை. நான் இருக்கத் தயார். ஆனல், இதல்ை என்ன கண்டு பிடிக்கப் போகிருேம் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. வாசு: அதுதான் எனக்கும் விளங்கவில்லை. இவன் ஏதோ மர்மமாகப் பேசுகிருன். சோமு : ராகவன் மிகத் தந்திரசாலி. அவனைக் கையுங் களவுமாகப் பிடிப்பதற்கு இது ஒன்றுதான் வழி யென்று எனக்குத் தோன்றுகிறது. இன்ஸ் : ராகவன்மேல் உங்களுக்கென்ன சந்தேகம். சோமு : அவனுக்குப் பணம் ஒன்றுதான் குறி. சரோஜினி யைப் பற்றி அவனுக்கு அக்கறையே இல்லை. அவளே அவன் கலியாணம் செய்து கொள்ளவேமாட்டான் . அவள்தான் அவனிடத்திலே மயங்கிக் கிடக்கிருள். வாசு : அப்படியே இருக்கட்டும். அதற்கும் நானும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் உன்னேடு சேர்ந்து இந்த அறையிலே அடைபட்டுக் கிடப்பதற்கும் என்ன சம்பந்தம்? சோமு : சரோஜினியை ஏமாற்றுவதற்குக் கடைசியாக இந்த பங்களாவைத்தான் ராகவன் உபயோகிக்கப் போகிருன்? இன்ஸ் : எதளுல் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்?