பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குற்றவாளி சோமு : நான்தான் உன்னை இங்கு வரும்படி சொன் னேன். அதற்கு முக்கியமான காரணம் உண்டு. வாசு : இப்போ நாம் உடனே மாலதியைப் பார்க்க வேண்டும். அவள் ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள். சோமு அவள் இப்பொழுது கவலைப்படக் காரணமில்லை. அவள்தான் இந்த ராகவனுடைய தொல்லையைப் பத்தாயிரம் .ெ கா டு த் து த் தீர்த்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிருளே ? வாசு அவள் நம்மை அங்கு வரும்படி இப்பொழுது போன் பண்ணவில்லையா ? சோமு அவள் வரும்படி சொன்னது எதல்ை தெரியுமா? வரசு : எதளுவிருந்தால் என்ன ? நாம் போகலாம். (அவசரமாக எழுந்திருக்கிரு:ன்.) சோமு ; அடே, அந்த ராகவன்தான் மாலதியை அப்படி நமக்குச் சொல்லும்படி கட்டாயப்படுத்தியிருப் பான். ஆகையால் நாம் கொஞ்சம் யோசனை செய்து என்ன செய்வதென்று தீர்மானிக்க வேண்டும். வாசு : ராகவன் பணத்தை வாங்கிக்கொண்டு அவசர மாகப் போய்விட்டதாகச் சொன்னளே ? சோமு : அப்படிச் சொல்லும்படி ராகவன் கட்டாயப் படுத்தியிருப்பான். அவனுக்கு இரண்டு காரியங்கள் நடைபெற வேண்டும். ஒன்று நாம் போலீசுக்குத் தகவல் கொடுக்கக் கூடாது. இரண்டாவது நாம் உன் வீட்டிற்குப் போய் அங்கேயே இருக்கவேண்டும்.