பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 49 சோமு : அப்படி வர முடியாது. இதன் ஒரு கதவை உள்ளே தாளிட்டிருக்கிறேன். மற்ற கதவின் வழியாக வர வேண்டுமானல் பெரிய ஹாலுக்குள் நுழைந்துதான் வரவேண்டும். அதற்குள் நுழைந்து பிறகு இதற்கு வரவேண்டிய அவசியமிருக்காது. இன்ஸ் : எதற்கும் இந்தக் கதவையும் உள்ளே தாளிட்டு விடலாம். அவர்கள் பேசுவது நமக்கு எப்படியும் நன்ருகக் கேட்கும். (இன்ஸ்பெக்டர் தாளிடுகிருர், மூவரும் எச்சரிக்கை யோடு உட்கார்ந்திருக்கின்றனர்.1 வாசு (மெதுவாக) . ஹாலேத் திறப்பதுபோல சத்தம் கேட்கிறது. சோமு : உஸ்....... பேசாதே. இன்ஸ்பெக்டர் ஸ்ார், இனி உங்களால்தான் காரியம் ஆகவேணும். (மூவரும் காது கொடுத்துக் கேட்கிரு.ர்கள்.) ( திரை ) காட்சி ஆறு (சோமசுந்தரத்தின் பங்களாவில் உள்ள பெரிய ஹால் மிகுந்த கலே உணர்ச்சியோடு அது அணி செய்யப்பட்டுள்ளது. பல ஒவியங்களும் சிற்பங் களும் காட்சியளிக்கின்றன. எல்லா மின்சார விளக்குகளும் போடப்படவில்லை யென்ருலும் போதுமான வெளிச்சம் இருக்கிறது. ராகவனும் சரோஜினியும் நாற்காலியருகில் நின்றுகொண் டிருக்கிருர்கள்.: