பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. இரண்டு தடைகள்

ராக்கெட்டுகள் மேலே செல்லுவதில் இரண்டு தடைகள் குறுக்கிடுகின்றன. அவற்றுள் ஒன்று, ஒலித்தடை (Sound barrier), மற்றொன்று வெப்பத்தடை (Heat barrier). இவற்றை . எப்படியும் சமாளித்தாகவேண்டும். இந்த இரண்டு தடைகள் என்ன என்பதையும், இவை எங்ஙனம் சமாளிக்கப்பெறுகின்றன என்பதையும் ஈண்டுத் தெளிவாக்குவோம்.

ஒலித்தடை : ஒலித் தடையை முதலில் கவனிப்போம். கடல் மட்டத்தில் மணிக்குச் சற்றேறக் குறைய 765 மைல் வேகத்தில் ஒலி செல்லுகின்றது. அதைவிட வேகமாகச் செல்லக் கூடிய ஊர்தியினை மீஒலி வேகமுடையது (Supersonic) என்றும், அதைவிடக் குறைந்த வேகமுடைய ஊர்தியினை ஒலிக்கும் உட்பட்ட வேகமுடையது (Subsonic) என்றும் வழங்குவர். ஒரு விமானம் ஒலியின் வேகத்தை அடையும் பொழுது அது திடீரென்று குலுங்கித் துள்ளிக் குதிக்கத் தொடங்குகின்றது ; அஃதாவது ஒரு நெருக்கமடைந்துள்ள காற்றுப் பைகளைத் (Air pockets) தாக்குவது போன்ற அதிர்ச்சி ஏற்படுகின்றது. சில சமயம் இத்தாக்குதல் மிகக் கடுமையாக ஏற்பட்டு விமானத்தின் இறக்கைகள் பிய்த்துக் கொண்டு போவதுமுண்டு.

இதற்குக் காரணம் என்ன? விமானம் "ஒலித் தடை"யை எட்டி விடுகின்றது ; ஒலியின் வேகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால் இஃது இப்பெயர் பெறுகின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஒலி ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்லும் நெருக்கப்பற்ற அலைகளாகப் பரவுகின்றது என்பதை நாம் அறி